சிவாஜிக்கு அடுத்து, தொடர்ந்து 2 முறை உயரிய விருதை பெரும் சூப்பர் ஸ்டார்!

இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்திய திரைப்படத்துறையின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும். இந்த விருதானது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கருதப்படு தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டாக 1969ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அன்றிலிருந்து வருடம் வருடம் திரைப் பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த விருதை சிவாஜி கணேசன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு பெற்றார். அவருக்குப்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 2019 ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதை பெற்றார்.

பிறகு தற்போது இரண்டாவது முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதை மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற உள்ளார். சூப்பர் ஸ்டார் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பினை வெளிக்காட்டும் படங்களை நடித்து ரசிகர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் பெருமைக்குரியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தப்படும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவானது அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில்  நடைபெற உள்ளது.

actor-rajini-cinemapettai
actor-rajini-cinemapettai

இந்த விழாவில் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 51-வது தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முறை இந்த உயரிய விருதை வாங்கும் பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவரே.

எனவே இந்தத் தகவலை அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர் .

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்