ஜான் ஏறுனா முழம் சறுக்குது.. நிம்மதியை தேடி இமயமலைக்கு போகும் சூப்பர் ஸ்டார்

Rajini Goes To Himalayas: ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட சூப்பர் ஸ்டார் அடிக்கடி இமயமலை செல்வதுண்டு. அங்கு சாதாரண மனிதராக பணம், புகழ் என அனைத்தையும் மறந்து தியானம் செய்வார். இதன் மூலம் அவருக்கு ஒரு தனி புத்துணர்ச்சியே கிடைப்பதாக பலமுறை கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஜெயிலர் பட ரிலீஸின் போது கூட தலைவர் இமயமலையில் தான் இருந்தார். அதை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருக்கும் அவர் அதை முடித்துவிட்டு லோகேஷ் உடன் இணைய இருக்கிறார்.

ஆனால் அந்த இடைவெளியில் மீண்டும் ஒருமுறை இமயமலைக்கு சென்று வரலாம் என அவர் யோசித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் சமீபத்தில் தன் மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

Also read: வேட்டையனில் ரெண்டு விஷயங்களை தோலுரித்த ரஜினி.. 15 நாளில் பூசணிக்காய் உடைக்கும் சூப்பர் ஸ்டார்

இதன் மூலம் ஐஸ்வர்யா முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பில் தன்னால் முடிந்த ப்ரமோஷனையும் செய்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விமர்சனமும் நெகட்டிவாக தான் இருந்தது. ஐஸ்வர்யாவும் அப்பா நடிக்காமல் வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.

ஏனென்றால் இது சூப்பர் ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. அதுதான் இத்தனை விமர்சனங்களுக்கும் காரணம். இது ஒரு புறம் இருக்க தன் அக்காவுக்கு போட்டியாக சௌந்தர்யாவும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். அதில் தலைவர் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து தேதிகளை கேட்டு வருகிறாராம்.

ஏற்கனவே தன் அப்பாவை வைத்து இவர் கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அது படுமோசமான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழ்நிலையில் மீண்டும் தன் அப்பாவிடம் வாய்ப்பு கேட்கும் சௌந்தர்யாவுக்கு ரஜினி ஓகே சொல்லி இருக்கிறாராம்.

Also read: லால் சலாம் பட தோல்விக்கு இவர்தான் காரணம்.. கூச்சமே இல்லாமல் பழி போடும் ஐஸ்வர்யா

இருந்தாலும் மகள் தோத்துவிடக்கூடாது என்ற கவலையும் அவருக்கு இருக்கிறது. இப்படி ஜான் ஏறுனா முழம் சறுக்குது என்ற கதையாக அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதனாலயே சூப்பர் ஸ்டார் மீண்டும் இமயமலைக்கு செல்ல பிளான் போட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்