தலைவி படம் பார்த்த பின் ஏ.எல்.விஜய்க்கு போன் போட்ட ரஜினி.. என்ன கூறினார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம் என்றால் அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படம்தான். தனி ஒரு பெண்ணாக தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஆளுமை செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் தலைவி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி இருந்ததாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருந்தது. முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகை திலகம் படத்தை போலவே தலைவி படமும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சினிமாவிற்காக உண்மை தன்மையை மறைத்து கற்பனை கலந்த அதிக காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தால் பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தை விரும்பவில்லை. அதேபோல் படக்குழுவினர் எதிர்பார்த்த வசூலையும் இப்படம் பெறவில்லை.

இந்நிலையில் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் தலைவி படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு சென்ற ரஜினி, இயக்குனர் விஜய்யை தொலைபேசியில் அழைத்து, படம் குறித்து மனம் விட்டு பாராட்டினாராம். ரஜினியின் பாராட்டினால் படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

thalaivi-kangana
thalaivi-kangana

தலைவி படம் வெளியான நாள் முதல் தற்போது வரை எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கேட்டு வந்த படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு படம் என்றால் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது சாதாரணம் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்