வானிலே வட்டமிட்டு கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார்.. லோகேஷ்-க்கு தலைவர் போட்ட ஸ்டிட் கண்டிஷன்

Super Star Rajini’s condition for Director Lokesh: 73 வயதிலும் செம எனர்ஜெட்டிக்காக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதுவும் ஜெயிலர் படத்திற்கு பின் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்துவிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்கும் நோக்கத்தில் படக் குழுவினர் இருக்கின்றனர். தற்போது வேட்டையின் படப்பிடிப்புக்காக ரஜினியும் கடப்பா, ஹைதராபாத் என பறந்து பறந்து வேலை செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஏப்ரலில் நிறைவடைந்து விடும்.

அதன் பின் மே மாதம் முழுவதும் ஃபுல் ரெஸ்டில் இருக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன் பின் ஜூன் முதல் வாரத்தில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்திற்கு தயாராக போகிறார். இதற்காக எல்லாத்திற்கும் ரெடியா இருக்கும் படியும் சூப்பர் ஸ்டார் லோகேஷிடம் ஸ்டிட்டாக சொல்லிட்டார்.

Also Read: ரீ-என்ட்ரியை தவறவிட்ட 5 ஹீரோக்கள்.. போர்தொழிலோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட ரஜினியின் நண்பன்

லோகேஷுக்கு ரஜினி போட்ட கண்டிஷன்

இதற்காக லோகேஷும் தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்டை பக்காவாக தயார் செய்யவும், படத்திற்கான முன் களப்பணிகளை ஆரம்பிப்பதற்கான வேலையையும் பார்க்கத் துவங்கிட்டார். தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த படத்தில் ரஜினி, தளபதி படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே டீன் ஏஜ்-க்கு செல்ல இருக்கிறாராம். இந்த படத்தில் ரஜினியை ரொம்ப நாட்களுக்குப் பிறகு மிகவும் அழகாகவும் இளமையாகவும் பார்க்க போகிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் வேட்டையன் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, அதன் பின் தலைவர் 171 படத்தில் லோகேஷ் உடன் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என்பது இப்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திருக்கிறது.

Also Read: திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி