ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மாதவனுக்காக ரஜினி போட்ட ட்விட்.. இதைவிட ஒரு மனுஷனுக்கு என்ன வேணும்

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ராக்கெட்ரி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியானது. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சயின்ஸ் சம்பந்தப்பட்ட இந்த திரைப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாதவனை பாராட்டி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு டிவிட் போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதை பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி, தியாகங்கள் செய்து, அரும்பாடு பட்ட பத்மபூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மாதவன் மிகத் தத்ரூபமாக இயக்கியிருக்கிறார்.

அந்த வகையில் அவர் ஒரு இயக்குனராக தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தன்னை நிரூபித்து இருக்கிறார். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இயல்பாக ரஜினிகாந்த் எந்த ஒரு நல்ல திரைப்படம் வந்தாலும் அதை பாராட்டுவதற்கு தயங்க மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபர்களை போனிலோ, நேரிலோ அழைத்து பாராட்டி விடுவார். அந்த வகையில் மாதவனுக்கு கிடைத்திருக்கும் இந்த பாராட்டு பட குழுவினருக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

உண்மையில் மாதவன் இந்தத் திரைப்படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுகளுக்கு அவர் நிச்சயம் தகுதியானவர்தான். தற்போது அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்து கொண்டிருக்கும் மாதவனுக்கு இந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

Trending News