தோல்வி பயத்தில் ரஜினி, வரிசை கட்டும் இத்தனை பேர் .. நீண்டு கொண்டே போகும் இயக்குனர்கள் பட்டியல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிக்கின்றனர். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் என தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டார்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் வெற்றியே ஒரு மிகப்பெரிய அழுத்தம் தான். ஏனென்றால் ரஜினியின் கடைசி மூன்று திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ரிலீஸ் ஆன அண்ணாத்தே திரைப்படமும் ரஜினி ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களே பெற்றது. இதுதான் ரஜினியின் இந்த அழுத்தத்திற்கு காரணம்.

Also Read: பக்கா பான் இந்தியா மூவி என நிரூபித்த நெல்சன்.. நான்கு ஸ்டேட்களில் இருந்து வரும் 4 டாப் ஸ்டார்கள்

இதனால் ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய தோல்வி பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நெல்சனின் ஜெய்லர் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய மகள் இயக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இதன் பிறகு ரஜினியின் படத்தை யார் இயக்குவார் என்பதே இப்போது பெரிய கேள்வியாக அமைந்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டான் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தியின் கதை மீது ரஜினிக்கு பெரிய அளவு நம்பிக்கை ஏற்பட வில்லையாம். அதனால் லவ் டுடே என்னும் வெற்றி படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதனிடம் கதை கேட்டிருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் காதுக்கு போன விஷயம்.. ஜெயிலர் படத்தால் பரிதவிக்கும் நெல்சன்

பிரதீப்பின் கதையும் பெரிதளவு ஈர்க்கவில்லை என்பதால் ரஜினிகாந்த் இயக்குனர் பி வாசுவிடம் கதை கேட்டிருக்கிறார். அந்த கதையும் செட்டாகததால் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் ராஜாவிடமும் கதை கேட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன், விருமன் படங்களை கொடுத்த முத்தையாவிடமும் கதை கேட்டிருக்கிறாராம் ரஜினி.

இப்படி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தோல்வி பயம் துரத்த, அடுத்தடுத்து இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டே இருக்கிறார். இதனால் ரஜினிக்கு கதை சொல்லும் இயக்குனர்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினிக்கு எந்த கதையின் மீதும் பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. அடுத்து வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சூப்பர் ஸ்டார் இப்போது இருக்கிறார்.

Also Read: வம்சிக்கு ரூட்டு போட்டு கொடுத்த ரஜினி.. வாரிசு படத்திற்கு முன் உதாரணமே சூப்பர் ஸ்டாரின் இந்தப் படம் தான்

- Advertisement -