வெற்றியின் ரகசியத்தை கத்துக்கொடுத்த ரஜினி.. தனுஷ் 150 கோடி வீடு வாங்கிய ரகசியத்தின் பின்னணி

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர். தொடக்க காலத்தில் இவர் மீது மொத்தமும் எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி வருகிறார் தனுஷ். தேசிய விருது பெற்ற கதாநாயகனாகவும் உயர்ந்து இருக்கிறார்.

தற்போது தனுஷ் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமே பார்க்கும் வகையில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். சென்னையில் விவிஐபிக்களின் இடமாக பார்க்கப்படும் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் அங்கு தான் இருக்கிறது. சமீபத்தில் அந்த வீட்டுக்கான கிரகப்பிரவேசம் நடந்து முடிந்தது.

Also Read: மீண்டும் பேய் படத்தில் நடிக்கப் போகும் ரஜினி.. சுவாரஸ்யமான தகவலை போட்டு உடைத்த பிரபலம்

தற்போது தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதற்கான பின்னணி கதை ஒன்று வெளியே வந்திருக்கிறது. நடிகர் தனுஷை பொறுத்த வரைக்கும் குறுகிய காலத்திலேயே வெற்றி அடைந்த ஒரு நடிகர். மேலும் இவர் வளர்ந்து வரும் நடிகனாக இருக்கும் போதே ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் திரும்பி பார்க்கும்படி சூப்பர் ஸ்டாரின் மகளை திருமணம் செய்து கொண்டார்..

தனுஷ் பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து இருந்தாலும் அப்போது அவரை பார்க்கும் பொழுது ஏனோ தானோ என்று இருக்கும் நடிகனாகத்தான் இருந்தார். மேலும் அவர் மீது பல சர்ச்சை விமர்சனங்களும் இருந்தன. அப்போது இருந்த தனுஷை பார்க்கும் பொழுது இப்போது அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவருடைய பேச்சு மற்றும் நடவடிக்கை எல்லாமே மாறியிருக்கிறது.

Also Read: ஆஸ்க்காருக்காக ரஜினிக்கு வலைவீசிய அக்கடு தேசத்து இயக்குனர்.. சூப்பர்ஸ்டாரின் புது அவதாரம்

அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம் . சூப்பர் ஸ்டார் ஒருமுறை நடிகர் தனுஷின் ஒரு காலத்தில் எனக்கு பெயர் புகழ் எல்லாமே கிடைத்தது. நான் அப்போது காற்றில் பறந்தேன். ஆனால் அதற்குள்ளேயே மூழ்கி விடாமல் என்னை நானே சுதாகரித்துக் கொண்டு ஆன்மீகம் பக்கம் என் நாட்டத்தை திருப்பினேன்.

அதேபோல் பெயர் புகழ் எல்லாம் கிடைக்கும் பொழுது நாம் ஆன்மீகம் பக்கம் வந்து விட வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி நாம் இருக்கும் வீடு கோயில் போல் இருக்க வேண்டும் அதற்கு அஸ்திவாரம் போடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதுதான் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு வாங்கியதன் ரகசியம். மேலும் தற்போது நடிகர் தனுஷை பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

Also Read: லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை