சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 4 போட்டியாளர்கள்.. விறுவிறுப்புடன் நடைபெற்ற செமி பைனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக மாறி உள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஜூனியர் மற்றும் சீனியர் என மாறி மாறி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சீனியர் சூப்பர் சிங்கர் 8வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையும் உள்ளதால் பார்வையாளர்களின் மத்தியில் யார் டைட்டில் வின்னர் ஆக போகின்றனர் என்ற எதிர்பார்ப்புடன் கண்டு களிக்கின்றனர்.

இன்னிலையில் இறுதிச் சுற்றுக்கு திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக எழுப்புகின்றனர். ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீதர் சேனா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று மற்றும் அதன் முன் தினம் நடைபெற்ற செமி பைனல் சுற்றில் முத்துச்சிற்பி முதல் பைனல் லிஸ்ட் ஆகவும், அவரைத் தொடர்ந்து அனு, அபிலாஷ், பரத் ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆதித்யா மற்றும் மானஸி இருவரும் போட்டியிலிருந்து வெளியேறினர்.

super-singer-semi-finalist
super-singer-semi-finalist

அதற்கு முன்பு அய்யனார் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வரும் வாரத்தில் இதுவரை சீசன் 8ல் வெளியேற்றப்பட்ட அனைவரும் ஒய்ல் கார்டு சுற்றில் போட்டியிடுவர், அவர்களுள் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு,

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நான்கு பேருடன் மொத்தம் 5 பேர் இறுதி சுற்றில் போட்டியிடுவார். ஆகையால் இறுதி சுற்றில் தேர்வான நான்கு பேர் தெரிந்துள்ள நிலையில் ஐந்தாவது நபர் யார் என்பதை அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்