சூப்பர் சிங்கர் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா? அந்த ஒரு பாட்டில் எல்லாரையும் அடக்கிவிட்டார்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் நடுவராக உன்னி கிருஷ்ணன், பென்னி தயால், எஸ் பி பி சரண், அனுராதா ஸ்ரீராம் நடுவராக உள்ளனர் பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மா கா பா தொகுப்பாளராக உள்ளனர்.

சூப்பர் சிங்கர் 8 இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. இதில் ஏற்கனவே 4 ஃபைனல் லிஸ்ட் தேர்வு செய்துள்ளனர். முத்துசிற்பி, அபிலாஷ், அனு ஆனந்த்,பரத் தேர்வாகியுள்ளனர்.

சென்ற வாரம் வைல்ட் கார்ட் சுற்று நடைபெற்றது. இதில் சூப்பர் சிங்கர் சீசன் 8 இல் வெளியேறிய போட்டியாளர்கள் பங்குகொண்டனர். இதில் கடைசி 4 வாரங்களில் வெளியேறிய ஐய்யனார், ஸ்ரீதர் சேனா, மானஸி, ஆதித்யா இவர்களில் ஒருவரை தான் தேர்வு செய்வார்கள்.

ஸ்ரீதர் சேனா குரலுக்கு நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் எலிமினேட் ஆனபோது ரசிகர்கள் மிகவும் கோபம் கொண்டனர். நடுவர் பென்னி-யை கடுமையாக விமர்சித்தனர். இதனால் பென்னி தயால் அடுத்த சீசனில் இருந்து சூப்பர் சிங்கரில் கலந்துகொள்ள மாட்டேன் என அறிவித்தார்.

ஸ்ரீதர் சேனா சென்ற வாரம் ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலை பாடி அரங்கத்தையே அதிர வைத்தார். அனைத்து நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் மேடைக்கே வந்து ஸ்ரீதர் சேனாவை பாராட்டினர். இந்த ஒரு பாட்டில் எல்லாரையும் அடக்கிவிட்டார். அப்போது ஸ்ரீதர் சேனா சித்ரா அம்மாவுடன் ஒரு பாடல் பாட முடியவில்லை என்று அழுதார்.

இவர் எலிமினேஷன்க்கு அடுத்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் சித்ரா உடன் பாடினர். அதே மேடையில் சித்ரா உடனே ஸ்ரீதர் சேனா ‘மலர்களே மலர்களே’ பாடலை பாடி தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.

benny-super-singer
benny-super-singer

சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் ஏற்கனவே 4 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். மீதமுள்ள இருவரில் ஒருவர் மக்கள் மூலமாகவும், மற்றொருவர் நடுவர் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் 5வது பைனல் லிஸ்ட்டாக மக்கள் கண்டிப்பாக ஸ்ரீதர் சேனாவை தேர்ந்தெடுப்பார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்