வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரெண்டு மெகா பட்ஜெட் படத்தை நம்பி கைவிட்ட சூப்பர் ஹிட் மூவி.. ரஜினி பெயரை கெடுத்த சிஷ்யன்

Super Hit Movie: இந்த காலத்து மக்களுக்கு கதை பிடித்து இருந்தாலே போதும் அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து விடுகிறார்கள். அந்த வகையில் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் டாப் ஹீரோக்கள் என்று இருந்தால் மட்டும் போதாது தியேட்டரில் போய் பார்க்கும் பொழுது அவர்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆகவும் இருக்க வேண்டும்.

அதிலும் கொடுத்த டிக்கெட் காசுக்கு பிரயோஜனமாக படம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொருவரும் திரையரங்குகளில் போய் படத்தை பார்க்கின்றார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு சில தியேட்டர்கள் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களை தீர்மானித்து அந்தப் படத்தை மட்டும் அவர்கள் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்ன பட்ஜெட் படங்கள் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்காமல் அதை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் போகப் போக தான் அந்த படம் சக்க போடு போட்டு வெற்றி பெறுகிறது. அப்படித்தான் இரண்டு மெகா பட்ஜெட் படத்தை நம்பி ஒரு சூப்பர் ஹிட் மூவியை கைவிட்டு விட்டார்கள்.

அதாவது உண்மையாக நடக்கும் சம்பவத்தை முன்வைத்து சமீபத்தில் வெளிவந்த படம் தான் சித்தா. இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்தார். அதே சமயத்தில் லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவி நடித்த இறைவன் படமும் வெளிவந்தது. அதனால் முக்கால்வாசி தியேட்டர்களில் சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படத்தை தான் அதிகமாக ரிலீஸ் பண்ணினார்கள்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த படம் நல்லா இருக்கும், அதுவும் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படம் மக்களிடம் பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று நம்பி சித்தா படத்தை யாருமே மதிக்காமல் போய்விட்டார்கள்.

ஆனால் இப்போது தான் இப்படத்துடைய அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. அதிலும் லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 ரஜினி பெயரை கெடுக்கும் அளவிற்கு மிக மோசமான விமர்சனத்தை பெற்றது. ஆனால் சித்தா படம் 20 கோடி லாபத்தை பெற்று அதிக வசூலை பெற்ற படமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் இனிமேலாவது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தப் படங்களை எடுத்து தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணினால் நல்ல வரவேற்பை பெற முடியும்.

- Advertisement -

Trending News