ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

2ஆம் பாகத்திற்கு வேற ஆள பார்த்துக்கிறேன்.. கமலையும், தயாரிப்பாளரையும் சுத்தலில் விடும் இயக்குனர்

உலகநாயகனின் படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. ஆனால் கமலஹாசன் ஒரு சில படங்கள் மட்டும்தான் இரண்டாம் பாகமாக எடுத்திருக்கிறார். த்ரிஷ்யம் என்னும் மலையாள படத்தை தமிழில் பாபநாசம் என ரீமிக்ஸ் செய்து கௌதமியுடன் நடித்தார், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்தின் மலையாளத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்பட்டு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மறுபடியும் பெரிய வெற்றி கண்டது. ஆனால் கமலஹாசன் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே இல்லை.

90 களின் நடுவில் கமலஹாசன் நடித்த கல்யாணராமன் படத்தை இரண்டாம் பாகமாக ஜப்பானில் கல்யாணராமன் என்று எடுத்து நடிகர் கமலஹாசன் நடித்து இருந்தார். அதன் பிறகு பார்த்தால் அவருடைய சொந்த தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கி நடித்திருந்தார். அதேபோன்று 94 ஆம் ஆண்டு ரிலீசாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்று வருகிறது, இதற்கான நடிகர்களின் தேடல்களில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

இதன் நடுவே கமலஹாசன் நடித்து தயாரித்த 90 களில் வெளியான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த விக்ரம் படத்தை சொல்லலாம் . அதேபோன்று இந்த விக்ரம் 2022 படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் எனவும் அதில் சூர்யாவுக்கு மிகப் பெரிய கேரக்டர் அமையும் எனவும் மேலும் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் இதனுடன் இணையும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபோன்ற ஒரு சூழலில் கமலஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றி நடை போட்ட ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாக இருக்கிறது. கமலும் இந்த படத்திற்கு ஓகே சொல்லியாயிற்று, இந்த படத்திற்கான தயாரிப்பாளரும் ரெடியாக இருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த படத்தின் இயக்குனர் தற்போது இந்த படத்தை இயக்குவதற்கு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமலஹாசனின் நடிப்பில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார், ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசை அமைத்து இருந்தார். 1996 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தின் வசூலை இந்தப் படம் முதன்முதலாக முறியடித்து சாதனை படைத்தது. இந்த படம் உருவாக செலவழிக்கப்பட்ட பணம் 25 கோடி ஆனால் இந்த படம் 60 கோடி வசூலை பெற்றுத் தந்தது.

கமலஹாசன் இந்த படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்திருப்பார், இவருடைய நண்பனாக பிரகாஷ்ராஜ் வருவார் பிரகாஷ்ராஜின் மகள் திடீரென காணாமல் போய்விடுவார், அந்த பெண்ணை தேடும் பணியில் தொடங்கும் இந்த படமானது அடுத்தடுத்து நகர்வுகளில் அதிகப்படியான திருப்பங்களையும் விறுவிறுப்புகளையும் கொண்டது.

2001ஆம் ஆண்டு மாதவன் ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலமாக கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, நீ தானே என் பொன்வசந்தம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என்னும் பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரால் காதல் ஒழுகும் ரொமான்ஸ் படங்களையும் கொடுக்கமுடியும் த்ரில்லர் நிறைந்த காவல்துறை தொடர்பான படங்களையும் கொடுக்க முடியும்.

தற்போது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது, இந்த படத்திற்கு உலகநாயகன் கமலஹாசன் கூட ஓகே சொல்லிவிட்டாராம் இந்த படம் ஐசரி கணேசனின் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. ஆனால் என்னவோ கௌதம் வாசுதேவ் மேனன் மட்டும் இந்த படத்தோடு ஒட்டாமல் சரியாக எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதாக தெரிகிறது. எனவே அவர் இப்படி டிமிக்கி கொடுத்துக் கொண்டு இருக்கவே ஐசரி கணேசன் வேறு ஒரு இயக்குனரை வைத்து இந்த படத்தை இயக்க ரெடியாக இருப்பதாக கௌதமை எச்சரித்துள்ளார்.

- Advertisement -

Trending News