தளபதிக்காக மெர்சலான கதையை பட்டை தீட்டி உள்ள பா.ரஞ்சித்.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இயக்குனர் ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ரஞ்சித் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் தான்.

அட்டகத்தி படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதிலும் கபாலி, காலா படங்களில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனராக அறிமுகமான புதிதிலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கிய பெருமை இவரையே சேரும்.

இறுதியாக நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பலரது பாராட்டையும் தட்டிச் சென்றது. இந்நிலையில் ரஞ்சித் முதல் முறையாக தளபதி விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ரஞ்சித், விஜய்க்காக தயார் செய்துள்ள சூப்பர் ஹீரோ படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜயை வைத்து நான் சூப்பர் ஹீரோ படம் எடுக்கிறேன். சூப்பர் ஹீரோ என்றால் மர்மமான சக்திகளை கொண்டவரல்ல. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள ஒரு தொடர்பை தான் இப்படத்தில் காண்பிக்க உள்ளேன். முழுவதும் கற்பனை கிடையாது.

vijay-pa-ranjith-cinemapettai
vijay-pa-ranjith-cinemapettai

அதேபோல் நான் இயக்கிய படங்கள் அனைத்திலும் எனக்கு பிடித்த கதைகளை மக்களுக்கு பிடிக்கும் வகையில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளேன். அதனால் தான் மக்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது” என்று உணர்ச்சி பூர்வமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். விஜய் மற்றும் ரஞ்சித் கூட்டணியில் உருவாக உள்ள இப்படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே தங்கள் கருத்துக்களை கூற தொடங்கிவிட்டனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்