என் கதையை திருடிய பல இயக்குனர்கள்.. ஜெய் பீம் பட நடிகர் குற்றச்சாட்டு

ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இப்படத்தில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி தற்போது சமூக வலைத்தளங்களில் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

இவர் சுப்ரமணியபுரம், காலா, முண்டாசுப்பட்டி, பிசாசு போன்ற பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் குட் சுப்பிரமணியன் 30 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். முண்டாசுபட்டியில் சாமியாராக நடித்த இவருடைய நகைச்சுவையான நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

அதற்கு முற்றிலும் மாறாக ஜெய்பீம் படத்தில் நெகட்டிவ் ரோலில் ஏட்டையாவாக மிரட்டி உள்ளார். ஜெய் பீம் படம் பார்த்தவர்களுக்கு இன்னும் அவர் மேல் கோபம் குறையவில்லை. அந்த அளவுக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். அஜித்தின் சிட்டிசன் படத்தில் கோ டைரக்டராக பணியாற்றியுள்ளார்.

சூப்பர் குட் சுப்பிரமணியன் ஜெய்பீம் வெற்றியை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், தமிழ் சினிமாவில் என் கதையை சொல்லாத ஆளே இல்லை.ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களிடம் என் கதையைக் கூறியுள்ளேன். ஆனால், என்னால் ஒரு படம் கூட டைரக்ட் செய்ய முடியவில்லை. என் கதையை திருடி சில இயக்குனர்கள் பல படங்கள் எடுத்துள்ளார்கள்.இருளர் மக்களுக்கு ஒரு சந்துரு மாதிரி தமிழ் சினிமாவில் கதை திருடும் இயக்குனர்களுக்கு ஒரு சந்துரு வரவேண்டும் என அப்பேட்டியில் தன் ஆதங்கத்தை கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்