சன் டிவியின் பிரபல ரோஜா சீரியல் நடிகைக்கு கொரோனா.. மாற்றப்படும் கதாபாத்திரம்

சன் டிவியில் தொடர்ந்து டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் ரோஜா. பரபரப்பான கதை களம் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் அணு என்ற வில்லி கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் ஷாமிலி சுகுமார்.

இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் ரோஜா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக அணுவாக யார் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் வி.ஜே அக்ஷயா அணு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜே அக்ஷயா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக எனக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது.

இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று ஆறுதல் கூறுகின்றனர். மேலும் மீண்டும் அணு கேரக்டர் மாற்றப்படுமா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

akshaya-corona
akshaya-corona
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்