18 வருடம் கழித்து சன் டிவியில் உருவாகும் பிரபல சீரியலின் பார்ட் 2.. அப்பவே 6 வருஷம் ஓடுன சீரியல்பா!

திரைப்படங்களைப் போலவே சமீபகாலமாக சின்னத்திரையில் சீரியல்களும் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் தங்களுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியல்களின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து விட்டனர்.

அந்த வகையில் சன் டிவி, ராதிகா மற்றும் சிவக்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் சித்தி 2 என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது. ஆனால் சித்தி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு சித்தி-2 சீரியலுக்கு இல்லை.

மேற்கொண்டு சோதனையாக ராதிகாவும் சமீபத்தில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகினார். இதனால் தற்போது எப்படி அந்த சீரியலை முடிக்கப் போகிறோம் என தெரியாமல் புலம்பி வருகிறார்களாம் சன் டிவியினர். அதுமட்டுமில்லாமல் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்க சில முன்னாள் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

இது ஒருபுறமிருக்க தற்போது தன்னுடைய பழைய 5 சூப்பர் ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது 18 வருடம் கழித்து சூப்பர் ஹிட்டடித்த சீரியல் ஒன்றிம் இரண்டாம் பாகத்தை தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறார்களாம்.

2003 ஆம் ஆண்டு நடிகை தேவயானி நடிப்பில் ஒளிபரப்பான சீரியல் தான் கோலங்கள். கோலங்கள் பார்க்காத குடும்பமே கிடையாது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஓடிய கோலங்கள் சீரியல் 2009 ஆம் ஆண்டு முடிவு பெற்றது.

kolangal2-cinemapettai
kolangal2-cinemapettai

இந்நிலையில் மீண்டும் தேவயானியை வைத்து கோலங்கள் 2 சீரியலை உருவாக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். சினிமாவில் தற்போது சின்னச்சின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் தேவயானி கோலங்கள்2 சீரியலில் நடிக்க ஓகே சொல்வாரா என பொருத்திருந்து பார்ப்போம்.