விஜய் டிவியை ஒழித்துக்கட்ட சன்டிவி களமிறக்கும் 3 புதிய ரியாலிட்டி ஷோக்கள்.. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை!

சமீப காலமாக சன் டிவியில் சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை எதுவுமே ரசிகர்களை கவறாததால் தற்போது சன் டிவிக்கு போட்டியாக இருந்த விஜய் டிவி மற்றும் ஜீதமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் பார்வையாளர்கள் அதிகமாக ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் நம்பர் 1 இடத்தில் இருந்த சன் டிவி நிறுவனம் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. நாம் தான் நம்பர் 1 என்ற மெத்தனத்தில் இருந்துவிடக் கூடாது என தன்னுடைய நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய புதிய நிகழ்ச்சிகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் யூடியூப் பிரபலங்களையும் அவர்களுடைய கற்பனைகளையும் கேட்டு வாங்கியுள்ளதாம். இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள சுட்டி அரவிந்த் மற்றும் விக்னேஷ் காந்த் இருவரும் இணைந்து சன் டிவியில் சும்மா கிளி என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் செம ஃபேமஸ் ஆக சென்றுகொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து ரவுடி பேபி என்ற பெயரிலும் ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் சன் டிவி நிறுவனம் பழையபடி ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பவுள்ளதாம்.

suntv-new-reality-shows
suntv-new-reality-shows

சீரியல்கள் மற்றும் படங்கள் எதுவுமே தற்போது வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்துள்ள சன் டிவி நிறுவனம் மேற்கொண்டு சில புதிய நிகழ்ச்சிகளை சத்தமில்லாமல் தயாரித்து வருவதாகவும், ஒன்னு போனாலும் இன்னொன்று கைகொடுக்கும் என நம்பி ரியாலிட்டி ஷோக்களுக்காகவே பணத்தை வாரி இறைத்து கொண்டிருக்கிறதாம்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -