சன்னி லியோன், ஜிபி முத்துவை வைத்து காசு சம்பாதிக்க போட்ட திட்டம்.. இதுக்கு பிட்டு படமே நடிச்சுருக்கலாம்

பாலிவுட் திரை உலகில் கவர்ச்சி புயலாக இருந்த சன்னி லியோன் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பே அவர் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் இப்படத்தில் நடித்திருக்கிறார். யுவன் இயக்கத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று வெளியானது.

இதற்கு முன்பே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பட்டு புடவை சகிதமாக வந்திருந்த சன்னி லியோனை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் நாளையும் அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று வெளியான இந்த திரைப்படம் அனைவருக்கும் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

Also read: பிரமோஷன் செய்தும் அடிமாட்டு விலைக்கு போன படம்.. உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் சன்னி லியோன்

அதாவது இந்த படத்தில் கதை என்று சொல்லுவதற்கு கூட ஒன்றுமே இல்லாமல் ஏனோ தானோ என்று ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் ரசிகர்கள் யாரை மிகவும் எதிர்பார்த்தார்களோ அந்த சன்னி லியோன் இடைவேளைக்கு பிறகு தான் வருகிறார். அதேபோன்று ஜிபி முத்து இப்படத்தில் இருக்கிறார் என்று பலத்த ப்ரமோஷன் நடைபெற்றது.

ஆனால் அவர் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்திருப்பது உச்சகட்ட ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் காமெடி என்ற பெயரில் சதீஷ் போடும் அறுவையும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து இருக்கிறது. இப்படி படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருப்பது படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கிறது.

Also read: அஜித்தை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சன்னி லியோன்.. துணிவு டீமுக்கு ஷாக் கொடுத்த ஓட்டிங் ரிப்போர்ட்

மேலும் ஹாரர் படம் என்று கூறிவிட்டு கொஞ்சம் கூட அதற்கு சம்பந்தமே இல்லாமல் தான் இப்படம் இருக்கிறது. இப்படி படத்தில் நிறைய குறைகளை வைத்துக்கொண்டு பட குழு சன்னி லியோன் நடிக்கும் முதல் தமிழ் படம் என்றும் ஜி பி முத்து இருக்கிறார் என்றும் விளம்பரப்படுத்தி கல்லா கட்ட நினைத்தார்கள். ஆனால் இப்போது இந்த படம் வந்த சுவடு தெரியாமல் போயிருக்கிறது. இப்படி ஒரு விமர்சனத்தை நிச்சயம் சன்னி லியோன் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

அவரிடம் கதையை எப்படி சொல்லி சம்மதம் வாங்கினார்கள் என்பதும் தற்போது பெரும் புதிராக இருக்கிறது. அந்த வகையில் சன்னி லியோன் கவர்ச்சி கேரக்டரிலே நடித்திருக்கலாம் என்று நொந்து போகும் அளவுக்கு இந்த படம் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த வகையில் நேற்று இந்த படத்துடன் வெளியான மற்ற திரைப்படங்களை காட்டிலும் ஓ மை கோஸ்ட் வசூலிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Also read: சன்னி லியோன் தான் என்னோட குரு.. வாடகை தாய்க்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?