பெட்ரோல் விலை குறித்து ட்வீட் செய்த சன்னிலியோன்.. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகளும், வாகன ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 ரூபாய்க்கு இன்று விற்பனையாகி வருகிறது.

இதுபோன்று பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாமல், சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால், சாமானிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், விலை உயர்வை மறைமுகமாக கண்டிக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், “இறுதியாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. எனவே சைக்கிளில் பயணம் செய்து உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sunny leone
sunny leone

சன்னி லியோனின் இந்த ட்விட்டுக்கு ரசிகர்கள் பலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -