சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தமிழே வாயில் வராது.. எப்படி தாக்குபிடிப்பாங்க? விஜய் டிவி பிரபலத்துக்கும் வலுக்கும் விமர்சனங்கள்

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.

கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

பிரமாண்டமான பிரீமியர் நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சுனிதா கோகோய் 7 ஆவது போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார். இவர் தமிழ் பேசுவது ரசிக்கும் படியாக இருந்தாலும், அவருக்கு ஒழுங்காக பேச வராது என்பது தான் உண்மை.

புகழில் தொடங்கி விமர்சனத்தில் முடிந்து விடுமா?

சுனிதா கோகோய் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே, சுனிதாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்தது, பின்னர் அது பொழுதுபோக்கு துறையில் அவருக்கு கதவுகளைத் திறந்தது. 2010 ஆம் ஆண்டில் தமிழ் நடன ரியாலிட்டி ஷோ ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 இல் அவர் பங்கேற்றபோது அவரது திருப்புமுனை ஏற்பட்டது.

முக்கியமாக ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். முதல் சீசன் தொடங்கி சமீபத்தில் முடிந்த சீசன் வரை அவர் கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

அவருக்கு தமிழில் ஒழுங்காக பேச வராது. ஆனால் அவர் முயற்சி செய்து பேசுவது பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும். ஆனால் தற்போது அவர் கால் வைப்பதோ போர்க்களம். ஏகப்பட்ட சண்டை வரும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். அங்கு எப்படி இவர் சரளமாக தமிழ் பேசாமல் தாக்குபிடிப்பார். எப்படி தனக்காக குறள் கொடுப்பார்.

புகழில் ஆரம்பித்து கடைசியில், இவரது ஆட்டம் விமர்சனத்தில் முடிந்து விடுமா என்ற கேள்வி தற்போது உருவாகியுள்ளது.

- Advertisement -

Trending News