சுந்தர் சி-யை நம்பாமல் ஜோசியத்தை நம்பிய தயாரிப்பாளர்.. கடைசியில் சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராக வலம் வருகிறார் சுந்தர் சி. அவருடைய ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் வைத்துள்ளார்.

காமெடி கலந்த அரசியல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சுந்தர் சி ஆரம்ப காலகட்டங்களில் எடுத்த முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பேராதரவை பெற்று பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள்.

இப்போது அவரது படங்களில் அந்தமாதிரி காமெடிகள் இல்லை என்றாலும் இப்போதும் தற்சமயம் இருக்கும் காமெடி நடிகர்களை கொண்டு, அவர்களை எந்த அளவுக்கு காமெடி செய்ய வைக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிக்க வைத்து நல்ல நல்ல படங்களையும் கொடுத்து வருகிறார்.

சுந்தர் சி ஆரம்ப காலகட்டங்களில் நல்ல கமர்சியல் இயக்குனர் என்று பெயர் எடுத்ததால் அவருக்கு முன்னணி நடிகர்களும் பட வாய்ப்புகளை கொடுக்க முன்வந்தனர். அந்த வகையில் அவர் அறிமுகமான சில வருடங்களிலேயே ரஜினியின் அருணாச்சலம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

சுந்தர் சி ஆரம்ப காலகட்டங்களில் ஒரே தயாரிப்பாளருக்கு மூன்று படங்கள் இயக்கி கொடுத்தார். அந்த மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்று அந்த தயாரிப்பாளரை செல்வச் செழிப்பாக வைத்திருந்ததாம்.

மேலும் வெளித் தயாரிப்பாளர்கள் வந்து கேட்டாலும் என்னுடைய தயாரிப்பாளருக்கு இன்னும் பத்து படங்கள் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன் என கூறினாராம். ஆனால் அதே தயாரிப்பாளர் ஜோசியம் பார்க்கும் ஒருவர், இனி நீங்களும் சுந்தரும் இணைந்து படம் செய்தால் கண்டிப்பாக நீங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவீர்கள் என்று சொன்னதால் சுந்தர் சி யை கழட்டி விட்டு விட்டாராம்.

அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் எடுத்த எந்த படமும் பெரிய அளவு வெற்றியை கொடுக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடைசியில் தன்னுடைய வீடு, நிலம் எல்லாம் விற்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டாராம்.

sundar-c-cinemapettai-01
sundar-c-cinemapettai-01

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -