இரு பிரம்மாண்ட படங்களுக்கு வந்த முட்டுக்கட்டை.. பழைய சூத்திரதாரியாய் சுந்தர் சி ஆடப்போகும் ஆட்டம்

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காபி வித் காதல். இந்தப் படம் காதல் மற்றும் நகைச்சுவை என ஒரு மசாலா கலந்த கலவையாக அமைந்தது. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் OTT மூலம் தான் வெளியிட்டார். ஆனால் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை. இந்தப் படத்திற்கு முந்தைய படமான அரண்மனை 3 இதுவும் இவருக்கு ஒரு வெற்றியை கொடுக்கவில்லை.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த பொழுது அடுத்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக இரண்டு மிகப் பிரம்மாண்டமான கதைகளை எடுக்கப் போவதாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அதற்காக ஒன்று சங்கமித்ரா மற்றொன்று மகாபாரதம் தழுவிய கதையைத் தேர்ந்தெடுத்தார்.

Also read: பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் புலம்பி வரும் சுந்தர் சி.. 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பிரம்மாண்ட படம்

இதில் சங்கமித்ரா எடுத்தே தீர வேண்டும் என்று ஆர்டிஸ்ட் செலக்சன் செய்துவிட்டு கால் சீட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார். சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.

அடுத்தபடியாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவிடம் போய் கதை சொல்லி இருக்கிறார் ஆனால் அவர்களும் தற்போது படு பிஸியாக இருப்பதால் இந்தக் கதையை மறுத்துவிட்டார்கள். ஆனால் உண்மையான ரீசன் என்னவென்றால் இவருக்கு சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே தோல்வி படமாக தான் அமைந்தது.

Also read: ஜீவாவின் மார்க்கெட்டை குட்டிச்சுவர் ஆக்கிய 5 படங்கள்.. சுந்தர் சி கூட கை கொடுக்காமல் போன பரிதாபம்

அதனாலயே சில நடிகர்கள் இவரை பார்த்து பயந்து இவரின் படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்கள். இவரின் இந்த பிரம்மாண்டமான கதைக்கு கதாநாயகர்கள் முட்டுக்கட்டையாக இருப்பது இவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் இவருக்கு என்ன தோணுச்சு என்று தெரியல மற்ற நடிகர்களை நான் ஏன் பிடித்து தொங்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்திற்கான கதையை தற்காலிகமாக நிறுத்திவிட்டார்.

பின்பு இவர் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பழைய ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார். அரண்மனை மூன்றாம் பாகத்தில் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் இவருக்கு வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்தது. அதனால அரண்மனை நான்காம் பாகம் எடுத்து வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளார். இந்தப் படம் இவர் நினைத்தபடி வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்