அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி.. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வரும் அடுத்த கூட்டணி

Sundar c: சுந்தர் சி இயக்கக்கூடிய படங்கள் முக்கால்வாசி காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அவர் அந்த காலத்திலிருந்து இப்பொழுது வரை எடுத்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில் தோற்றுப் போய்விட்டார். அதனால் இனி புதிதாக எதையும் தேடி போக வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளார்.

அதற்காக வெற்றியான படங்களை தொடர்ச்சியாக கொண்டு போய் வெற்றியை பார்க்கலாம் என்று மூளைக்கு எட்டிவிட்டது. அதன்படி அரண்மனை 1,2,3 மற்றும் சமீபத்தில் வெளியான 4. இது அனைத்துமே அவருக்கு ஹிட் அடித்து விட்டது. அதுவும் அரண்மனை 4, 100 கோடி வசூலை தாண்டி இந்த படத்துடன் போட்டி போட்டு வந்த படங்களை பின்னுக்கு தள்ளி விட்டது.

சுந்தர் சி-யின் அடுத்த அத்தியாயம்

இதனை அடுத்து மறுபடியும் இதனுடைய தொடர்ச்சியாக அரண்மனை 5 எடுத்துக் கொண்டே போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பேய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார். அதனால் வேறொரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியை கொடுத்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக 2018 ஆம் ஆண்டு ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்யாணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இந்த படமும் வெற்றியாக தான் அமைந்தது. அதனால் மீண்டும் இப்படத்தில் கையை வைத்தால் வசூலை பார்க்கலாம் என்று மூன்றாம் பாகத்திற்கு பிளான் பண்ணி விட்டார். இதற்காக இடையில் கூட கவினை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் தற்போது கவின் வேண்டாம் என்று முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் சிவாவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டார். அத்துடன் இதில் ஹீரோயினாக வாணி போஜன் கமிட் ஆகி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து மற்ற ஆர்டிஸ்ட்டுகளை தேடும் முயற்சியில் சுந்தர் சி இறங்கி இருக்கிறார். அதே நேரத்தில் இப்படத்தில் சுந்தர் சி-யும் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

விமல்
மிர்ச்சி சிவா
யோகிபாபு
வாணி போஜன்

ஏனென்றால் தற்போது சுந்தர் சி நடிப்பை திரையில் பார்த்து என்ஜாய் பண்ணும் அளவிற்கு இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கப் போகிறார்கள். இப்பொழுது சுந்தர் சி படம் என்றாலே திரையரங்குகளில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது.

100 கோடி வசூலை தட்டி தூக்கிய அரண்மனை-4 ரகசியங்கள்

- Advertisement -