ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எனக்கே ஷட்டரா.. தட்டி தூக்கிய சுந்தர் சியை கப்பு சிப்புனு உட்கார வைத்த யுவன்

இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி கடைசியாக அரண்மனை 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், யோகி பாபு, விஜய் டிவி டிடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் யுவன் கடைசியாக வின்னர் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் யுவன் மலேசியாவில் “யுவன் 25″என்ற இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். அந்த நிகழ்ச்சி இந்த வார இறுதியில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதற்காக அவர் மலேசியா செல்லும் சமயத்தில் சுந்தர் சி பட சம்பந்தப்பட்ட பின்னணி இசை ஆகியவற்றை முடித்துவிட்டு பிறகு செல்லுங்கள் என்று அவரிடம் கூறியிருக்கிறார்.

இசை நிகழ்ச்சியில் தீவிரம் காட்டி வந்த யுவன் ,சுந்தர் சி கேட்டுக் கொண்டதற்கிணங்க காபி வித் காதல் படத்தின் பின்னணி இசை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்துக் கொடுத்துள்ளார். மேலும் அந்த வேலை சுந்தர் சி-க்கு திருப்திகரமாக இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் யுவன் மலேசியாவுக்கு சென்றிருக்கிறார்.

தற்போது பல இசையமைப்பாளர்கள் இயக்குனர்களுக்கு குறித்த நேரத்தில் பட வேலைகளை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். ஆனால் யுவன் சங்கர் ராஜா அவருடைய பிசியான வேலைகளிலும் தன்னுடைய வேலையை முடித்துக் கொடுத்து சென்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் யுவன் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் வேலை என்று வந்துவிட்டால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து விடுகிறார்.

- Advertisement -

Trending News