சுந்தர் சி படத்திலிருந்து பின்வாங்கிய ஹீரோ.. அடுத்தடுத்த ஆஃபரால் டீலில் விட்ட பரிதாபம்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான காஃபீ வித் காதல் படம், படு மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியுற்றது. இதனிடையே 6 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா படத்தை இயக்க தற்போது சுந்தர் சி ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் ஆர்யா, ஜெயம்ரவி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், கதாநாயகியாக மாளவிகா மோகன் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்ரவியை நடிக்க வைக்க சுந்தர் சி படாதாபாடு பட்டு வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரது மார்க்கெட்டை சற்று அதிகரித்துள்ளது.

Also Read: தம்பியை தூக்கிவிட்ட மோகன் ராஜா.. ஜெயம்ரவியின் பிளாக்பஸ்டர் 3 படங்கள்

இப்படத்தில் ஜெயம்ரவி அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ராஜ ராஜ சோழனாக வலம் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்கும் முன்பு வரை, இவரை எப்படி மணிரத்னம் தேர்வு செய்தார் என பலரு விமர்சித்தனர். ஆனால் ஜெயம் ரவியின் நடிப்பு, பேசிய அதனை வாய்களையும் பிளந்து பார்க்கும் அளவிற்கு தன் கம்பீரமான நடிப்பு திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தினார்.

இந்தாண்டு ஏப்ரலில் இப்படத்தின் பாகம் 2 ரிலீசாக உள்ள நிலையில் முழுக்க முழுக்க ஜெயம் ரவியின் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே கதை நகரும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்தாண்டு 2024 வரை வெவ்வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் சம்பளத்தையும் எக்கச்சக்கமாக உயர்த்தி கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Also Read: பொறாமையில் பொங்கிய விக்ரம், கார்த்தி.. ஜெயம்ரவிக்கு வாரிக் கொடுத்த மணிரத்தினம்

இதன் காரணமாக சுந்தர்.சியின் சங்கமித்ரா படம் ஒரு சரித்திர படம் என்பதால் இப்படத்தில் நடிக்க பல நாட்கள் ஒதுக்கி கால்ஷீட் கொடுக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் ஜெயம் ரவி தற்போது இருக்கும் பிஸியான காலக்கட்டத்தில் கண்டிப்பாக அவரால் இப்படத்தில் தற்போது நடிக்க வாய்ப்பில்லாத நிலையில், பின் வாங்கியுள்ளார். ஏற்கனவே ஜெயம்ரவி மார்க்கெட் அதிகரித்ததால் சங்கமித்ரா படத்தில் நடிக்க திடீரென தன் சம்பளத்தை உயர்த்தி கேட்டு வந்தார்.

இதனால் கடுப்பில் இருந்த சுந்தர்.சிக்கு மேலும் மற்றொரு தலைவலியை ஜெயம் ரவி ஏற்படுத்தியுள்ளார். ஜெயம் ரவி இப்படி பின் வாங்குவது சற்றுகூட சரியானதல்ல என்று சுந்தர் சி தரப்பு தெரிவித்து வந்தாலும், மற்ற படங்களில் நடிக்க அட்வான்ஸ் பணம் வரை வாங்கி விட்டதால் வேறு வழியில்லாமல், ஜெயம்ரவி இவ்வாறு நடந்துகொள்வதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: சினிமாவில் நடிக்க விரும்பும் சுந்தர்சியின் மகள்.. உதவி செய்ய மாட்டேன் என உறுதியாக இருக்கும் குஷ்பூ

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்