பிரம்மாண்டமான வரலாற்று படத்தை எடுக்கப்போகும் சுந்தர் சி.. வலையில் விழுந்த 2 திமிங்கலங்கள்

சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கிடப்பில் போட்ட படம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்து இருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது.

Also Read : ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று போனது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாம். மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆகையால் லைக்கா நிறுவனத்துடன் உதயநிதி கைகோர்த்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாக பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read : சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

மேலும் இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் வேலைகள் ஒரு வருடத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறதாம். இதனால் படப்பிடிப்பு தொடங்கிய உடனே படத்தை எளிதாக முடித்து விடலாம் என சுந்தர் சி கூறியுள்ளார். மேலும் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி தான் இப்போதும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

காமெடி ஜானரலில் கலக்கி வந்த சுந்தர் சி சில ஹாரர் படங்களிலும் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் முதல்முறையாக வரலாற்று படத்தை எடுக்க உள்ளதால் காபி வித் காதல் படத்தை போல் இந்தப் படத்தையும் சொதப்பி விட கூடாது என ரசிகர்கள் சுந்தர்சிக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

Also Read : சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் கொடுத்த சுந்தர் சி.. அடுத்தடுத்து மண்ணை கவ்விய 5 படங்கள்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -