பாவம் கஷ்டப்படுகிறாரே என்று உதவி செய்த சுந்தர் சி.. ஆனால் முதுகில் குத்திய தயாரிப்பாளர்

சுந்தர் சி தன்னை அறிமுகப்படுத்தியவர் கஷ்டப்படுகிறாரே என்று நல்லது செய்யப்போய் அது அவருக்கே வினையாக முடிந்த செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இத்தனைக்கும் சுந்தர் சி யை வைத்து நன்றாக சம்பாதித்த தயாரிப்பாளராம்.

சுந்தர் சி தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ந்து மூன்று படங்கள் செய்தார். அந்த மூன்று படங்களுமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வசூல் மழை பொழிந்தது.

அந்த நேரத்தில் தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததன் காரணமாக தொடர்ந்து அதே தயாரிப்பாளருக்கு 10 படம் கூட செய்ய தயாராக இருந்தாராம் சுந்தர் சி. ஆனால் அந்த தயாரிப்பாளருக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்ததால் இனி மீண்டும் சுந்தர் சியுடன் இணைந்து படம் செய்தால் நஷ்டம் வரும் என கூறியதை நம்பி சுந்தர் சி யை இனி நீ கம்பனிக்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

அதன்பிறகு சுந்தர் சி வேறு சில தயாரிப்பாளர்களிடம் பணியாற்றி வந்தார். சுந்தர் சி வெளியேறிய பிறகு அந்த தயாரிப்பாளர் தயாரித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து அவருக்கு பெரிய கடன் சுமையை ஏற்படுத்தி விட்டதாம்.

அந்த நேரத்தில்தான் விஜய்யின் பூவே உனக்காக போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. இதனால் சுந்தர் சி மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் நன்றாக இருக்கும் என கருதிய சந்திரசேகர், சுந்தர் சி யிடம் விஜய்க்காக ஒரு கதை சொல்ல சொன்னாராம்.

ஆனால் சுந்தர் சி, தன்னுடைய முதல் மூன்று படத்திற்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு தான் இந்த படத்தை செய்வேன் எனக் கூறி அவரிடம் அனுப்பி வைத்தாராம். ஆனால் அந்த தயாரிப்பாளரோ, எஸ் ஏ சந்திரசேகரிடம், விஜய்யை வைத்து படம் செய்ய தயார் தான், ஆனால் சுந்தர் சிக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனர் மற்றும் புதிய கதை தயாராக உள்ளது எனக்கூறி ஓகே சொன்னாராம். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ் ஏ சந்திரசேகர் தயாரிப்பாளர் சொன்னதை சுந்தர் சியிடம் சொல்ல அவரோ மனம் நொந்து போய் விட்டாராம்.

sundar-c-cinemapettai
sundar-c-cinemapettai
- Advertisement -