வைகுண்டபுரம் படத்தை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் அடுத்த டப்பிங் படம்.. ரஷ்மிகா மந்தனா வேற லெவல்

முன்னரெல்லாம் தெலுங்கு படங்களை டப்பிங் செய்து தியேட்டரில்தான் வெளியிடுவார்கள். ஆனால் சமீபகாலமாக அண்டை மாநிலங்களில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை தமிழில் டப்பிங் செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் உள்ள அனைத்து சூப்பர் ஹிட் படங்களையும் டப்பிங் செய்து ஒளிபரப்பி வருவது விஜய் டிவி தான். அந்த வகையில் சன் டிவியும் அந்த முயற்சியை எடுத்து பார்க்கலாமே என அல்லு அர்ஜுன் நடித்த வைகுண்டபுரம் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சன் டிவிக்கு நல்ல டிஆர்பி ஏற்படுத்தி கொடுத்தது வைகுண்டபுரம். அதனைத் தொடர்ந்து இனி ஒரு சில நாட்கள் இடைவெளியில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை ஒளிபரப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் நித்தின் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் பீஷ்மா படத்தை தமிழிலும் பீஷ்மா என்ற பெயரில் டப்பிங் செய்து வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சன் டிவி ஒளிபரப்ப உள்ளது.

bheesma-cinemapettai
bheesma-cinemapettai

வைகுண்டபுரம் படத்தை போலவே பீஷ்மா படமும் நல்ல டிஆர்பி பெறும் என சன்டிவி நம்புகிறதாம். இந்த முறை மட்டும் சூப்பர் ஹிட் அடித்து விட்டால் தொடர்ந்து இதே போன்று இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்களாம்.

தற்போது பீஷ்மா படத்தின் தமிழ்ப் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்கள் தமிழில் தங்களுடைய மார்க்கெட்டை பிடிக்க இது ஒரு நல்ல வழி தான் என ஒத்துழைப்பு தருகிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்