1000 எபிசோடை கடந்த சூப்பர் ஹிட் சீரியலின் கதாநாயகி தூக்கிய சன் டிவி.. துவங்கப்படும் புதிய சீரியல்

எப்போதுமே டிஆர்பியில் டாப் இடத்தை பிடிக்கும் சன் டிவி சீரியல்கள் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு தான். விதவிதமான கதைக்களத்துடன் காலை 10 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு வரை தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவரும் சன் டிவியில் அவ்வப்போது புதிய சீரியல்களும் அரங்கேறி வருகிறது.

இதில் தற்போது புதிய சீரியல் துவங்க உள்ளது. அந்த புத்தம் புது சீரியலில் நடிகர் நந்தன் லோகநாதன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்தத் தொடரை சரிகமா நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்

நடிகர் நந்தன் லோகநாதன் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வந்தாள் ஸ்ரீதேவி, சித்திரம் பேசுதடி 2 போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

அதே போன்று 1000 எபிசோடுகளை அசால்டாக தாண்டிய சூப்பர் ஹிட் சீரியலான ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் இரண்டாம் பாகத்தில் ஹிமா பிந்து கதாநாயகியாக நடித்து இளசுகளின் இதயத்தைக் கவர்ந்தவர். இதில் ஹிமா பிந்து-நவீன் உடன் சேர்ந்து இதயத்தை திருடாதே சீரியலில் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் பலரைக் கவர்ந்தது.

Also Read: மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்

ஆகையால் கலர்ஸ் தமிழின் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் இதயத்தை திருடாதே சீரியலும் ஒன்று. இந்த சீரியல் முடிந்தபிறகு ஹிமா பிந்துவை பார்க்க முடியாதே என ஏங்கிய ரசிகர்களுக்கு தற்போது அவர் சன் டிவியில் புதிய தொடரில் நடிக்கப்போகிறார் என தெரிந்ததும் குஷியாகி உள்ளனர்.

இவ்வாறு கலர்ஸ் தமிழ் சேனலின் இரண்டு பிரபலங்களை சன் டிவி தட்டி தூக்கி தனது டிஆர்பியை எகிற விடுவதற்காக புதிய தொடரை துவங்கப் போகிறது. இந்த சீரியல் நிச்சயம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என விமர்சிக்கப்படுகிறது.

Also Read: ஜீ தமிழ், விஜய் டிவிக்கு நேர்ந்ததைப் பார்த்து உஷாரான சன் டிவி

- Advertisement -