இந்த வார சன்டிவி படங்களின் டிஆர்பி ரேட்டிங்.. விக்ரமை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் நகரப்புற முதல் கிராமப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும். அந்தவகையில் சன் டிவியில் 47 வது வாரம் நவம்பர் 21ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்கள் எந்த ரேட்டிங் பிடித்திருப்பது என்பதை பார்ப்போம்.

சாமி: ஹரி இயக்கத்தில் 2003ல் வெளியான திரைப்படம் சாமி. விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். விக்ரம் திருநெல்வேலி டிஎஸ்பி ஆறுச்சாமியாக நடித்திருந்தார். சாமி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி சாமி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படம் டி ஆர் பி யில் 4.97 ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

அயோக்யா: வெங்கட் மோகன் இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் அயோக்யா. இப்படத்தில் விஷால், ராசி கண்ணா, பார்த்திபன் என பலர் நடித்திருந்தார்கள். அயோக்யா படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அயோக்யா படம் 4.60 ரேட்டிங் பெற்று டிஆர்பி யில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சீமராஜா: சிவகார்த்திகேயன், சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2018 இல் வெளியான திரைப்படம் சீமராஜா. சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராம் சீமராஜா படத்தை இயக்கியிருந்தார். சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சீமராஜா படம் 11.90 ரேட்டிங் பெற்று டிஆர்பில் முதலிடத்தை பெற்றது.

ட்ரிப்: டேனியல் மஞ்சுநாத் இயக்கத்தில் 2021 ல் வெளியான திரைப்படம் ட்ரிப். யோகி பாபு, கருணாகரன், சுனேனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். சுற்றுலா செல்லும் நண்பர்கள் காட்டுக்குள் சிக்கி அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதை ட்ரிப் படம் வெளிப்படுத்துகிறது. ட்ரிப் படம் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. இப்படம் 2.93 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் இருந்தது.

trip-cinemapettai