300 எபிசோடுகளை தாண்டி கிளைமாக்ஸை எட்டிய ஹிட் சீரியல்.. சன் டிவியின் டிஆர்பிக்கு ஆப்பு

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் அன்பே வா சீரியல். இந்த சீரியல் ஆரம்பித்து சிறிது காலத்திலேயே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

இந்த சீரியலின் கதாநாயகியாக நடிகை டெல்னா டேவிஸ், பூமிகா என்னும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து வருகிறார். மேலும் இவர் மலையாள திரைப்படத்துறையிலும் தமிழ் திரைப்படத் துறையிலும் பணியாற்றியவர். இவர் ‘ஹேப்பி வெட்டிங்’ மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அடுத்தபடியாக இந்த சீரியலின் கதாநாயகன் விராட். இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ‘பேரழகி’ சீரியல் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்பொழுது அன்பே வா சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் விஜே சங்கீதா போன்றோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த அன்பேவா சீரியலை இயக்குனர் செல்வா இயக்கிவருகிறார்.

இப்படி ஒரு சூப்பர் ஹிட் கூட்டணியை அமைத்து சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அன்பே வா. டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக்கொடுத்து விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இவ்வாறு அருமையான கதைக்களத்துடன் காதல் நிறைந்த கதையாக இருந்த ‘அன்பே வா’ சீரியல் தொடங்கிய சில காலங்களிலேயே முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்