விஜய் மீது குறைந்த நம்பிக்கை.. சன் பிக்சர்ஸ் எடுத்த அதிரடி முடிவு

சன் டிவியின் பெரிய வளர்ச்சிக்கு விஜய்யின் படங்கள் மிகவும் உறுதுணையாக இருந்த நிலையில் கடைசியாக வெளியான மாஸ்டர் படத்தால் விஜய் படங்களின் மீது நம்பிக்கை குறைந்து விட்டதாக சன் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

எப்போதுமே விஜய் நடிக்கும் படங்களை ஆரம்பத்திலேயே விலை பேசி முடித்து விடுவார்கள் சன் நிறுவனத்தினர். அதற்குக் காரணம் விஜய்யின் படங்கள் தொலைக்காட்சிகளில் நல்ல டிஆர்பி-களை பெற்றுக் கொடுக்கும் என்பதால் தான்.

பத்து வருடத்திற்கு மேலாக விஜய்யின் படங்கள் சன் டிவிக்காக பல டிஆர்பி சாதனைகளை செய்துள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் கேரியரிலேயே சன் டிவியில் மிகக்குறைந்த டிஆர்பி பெற்றுள்ளது.

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட விஜய்யின் பழைய படங்கள் கூட ஏகப்பட்ட டிஆர்பியை குவித்த நிலையில் பக்கமாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு குறைந்த டிஆர்பி பெறும் என சன் நிறுவனமே நினைத்துப் பார்க்கவில்லையாம்.

இதன் காரணமாக தாங்கள் தயாரிக்கும் படங்களை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் விஜய் படங்களை வழக்கத்தை விட குறைவான விலை கொடுத்து வாங்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் விஜய் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களின் சேட்டிலைட் உரிமைகள் கூட மிகப் பெரிய விலைக்கு செல்லாது என்பதே தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படம் குறைந்த டிஆர்பி பெற்றதற்கு சீக்கிரம் ஓடிடியில் வெளியானது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம். எது எப்படியோ வழக்கம்போல் சன் வட்டாரங்களில் இருந்து ஒரு புதிய வதந்தியை கிளப்பி விட்டுவிட்டார்கள்.

master-cinemapettai
master-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்