இணையத்தில் கசிந்த தளபதி 65 லுக்? அப்செட்டில் சன் பிக்சர்ஸ்

என்னதான் பார்த்து பார்த்து ஒவ்வொரு படத்தையும் விஜய் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நடத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் விஜய் படத்தை பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டோ ஷூட் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியது.

sarkar-photoshoot-cinemapettai
sarkar-photoshoot-cinemapettai

இதனால் தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் விஜய்யின் தளபதி 65 படத்தின் போட்டோஷூட் நேற்று சன் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்தும் விஜய் தளபதி 65 பட போட்டோ ஷூட்டில் கலந்து கொள்ள வந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தலைமுடி அதிகம் வைத்து நடிப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

அந்தவகையில் தளபதி 65 படத்திலும் அதே மாதிரி கெட்டப்பில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் விஜய். இதற்காக கிட்டத்தட்ட மூன்று வடிவிலான போட்டோ ஷூட் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஒரு கெட்டப்பில் தான் விஜய் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தளபதி 65 படத்திற்காக விஜய் பயன்படுத்திய கெட்டப்பின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதாக விஜய் ரசிகர்கள் வெகு வேகமாகப் பரப்பி வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கையில் மாஸ்டர் படத்தின் புகைப்படம் போல் தான் தோன்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vijay-thalapathy65-photoshoot
vijay-thalapathy65-photoshoot
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்