ரகசியம் வெளி வந்துரும்ன்னு சன் பிக்சர்ஸ் செய்யும் வேலை.. தலைவர் 171-ஆல் லோகேஷுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி

Thalaivar 171: புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோருக்குமே ஆசையாக தான் இருக்கும். அது என்னவோ ரொம்பவும் ஜாலியான விஷயம் என்று சுற்றி இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும். ஆனால் அந்த உச்சியில் இருப்பவர்களுக்கு தான் அந்த அழுத்தத்தின் கொடுமை புரியும்.

வெற்றி என்பது எப்போதுமே முள் கிரீடம் தான். அதைத்தான் தன் தலையில் இப்போது சுமந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அறிமுகமான ஒரு படம் மட்டுமே வளர்ந்து வரும் உடன் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல் என எல்லாமே பெரிய ஹீரோக்கள். பழம் பழுத்து மடியில் விழுந்த கதையாக, தேடிப் போகாமலேயே சூப்பர் ஸ்டார் படத்தின் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார்.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஏப்ரல் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சினிமா விகடன் விருது மேடையில் அப்டேட் கொடுத்து விட்டார் லோகேஷ். இந்த படத்திற்கு ஈகிள்,கழுகு, காளி என மூன்று பெயரில் ஒன்றை செலக்ட் செய்ய இருக்கிறார்கள்.

வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் பெரிய ஹீரோக்களின் படங்களை கையில் எடுத்துக் கொண்டாலே எல்லா விதமான தலைவலியும் வந்துவிடும்.

அந்தப் படத்தின் ரிசல்ட் வெற்றி என்றால் அது ஹீரோவின் பெயருக்கு வந்துவிடும். ஆனால் படம் தோல்வி அடைந்து விட்டால் மொத்த விமர்சனமும் இயக்குனருக்கு தான். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் சொல்லவா வேண்டும். காசு பார்த்த கை எப்போதும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க.

அந்த நிலைமை தான் இப்போ சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு. ஜெயிலர் படத்தின் மூலம் கோடிகளை வசூலாக அள்ளி லாபம் பார்த்து விட்டார்கள். இதே போன்ற ஒரு வசூலை தலைவர் 171 படத்தில் எடுத்து விட வேண்டும் என்பதுதான் சன் பிக்சர்ஸின் இப்போதைய ஒரே குறிக்கோள்.

அதை தாண்டி சம்பளம் மட்டும் இல்லாமல், படத்தின் வியாபாரத்திலும் ரஜினிக்கு பங்கு இருக்கிறது. இதனால் மொத்த அழுத்தமும் இப்போது லோகேஷ் கனகராஜ் மேல் தான் இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஒரு சென்டிமென்ட் ஆன இடம்.

படப்பிடிப்பை அங்கு தான் தொடங்குவார். ஆனால் இதை தலைவர் 171 படத்தில் மாற்றி விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். படத்தின் ப்ரோமோ சூட்டிங் பிரசாத் லேப் இடத்தில் நடக்காமல், சன் டிவி அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

பிரசாத் லேப்பில் ஷூட்டிங் நடத்தப்பட்டால் வீடியோக்கள் கசிவதற்கு வாய்ப்பிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் காரணம் சொல்லி இருக்கிறது. படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னே, லோகேஷுக்கு இது போன்ற நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

‘ யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று கண்ணதாசன் ஒரு பாடல் வரியை எழுதியிருப்பார். இது லோகேஷ் கதையில் சரியாக இருக்கிறது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்து கொண்டிருக்கும்போது என்னுடைய ஸ்கிரிப்டுக்கு தான் ஹீரோக்கள் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தவர். அவருக்கு லியோ படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், இப்போது வளைந்து கொடுத்துப் போக வேண்டிய நிலைமையில் இருக்கிறார்.

Next Story

- Advertisement -