நினைத்ததை சாதித்த சன் பிக்சர்ஸ்.. ஆரம்பத்திலேயே தலைவர் 171 க்கு லோகேஷை தட்டி வைத்த மாறன் குரூப்ஸ்

Lokesh Kanagaraj :சன் பிக்சர்ஸ் இப்போது தலைவர் 171 மற்றும் தனுஷின் ராயன் போன்ற படங்களை தயாரித்து வருகிறது. லோகேஷ், ரஜினி முதல் முறையாக கூட்டணி போட்டுள்ள தலைவர் 171 படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வருகிறது.

இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் ஆரம்பம் முதலே தன் படத்தில் பணியாற்றிய ஒரே குரூப்பை தான் அடுத்தடுத்த படங்களிலும் கமிட் செய்வார்.

ஆனால் ஆரம்பத்திலேயே லோகேஷை தட்டி வைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ். அதாவது லோகேஷின் கடைசி படமான லியோ படத்தில் மனோஜ் பரமஹம்சா கேமரா மேன்னாக பணியாற்றி இருந்தார்.

தலைவர் 171 இல் க்ரிஷ் கங்காதரன்

லோகேஷின் ஆஸ்தான கேமரா மேன்னாக இருக்கும் இவர் தலைவர் 171 படத்தில் இல்லையாம். அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற க்ரிஷ் கங்காதரன் தான் தலைவர் 171 கேமரா மேன் ஆக பணியாற்ற இருக்கிறார்.

இவர் தமிழில் சர்க்கார் படத்தில் பணியாற்றிய நிலையில் லோகேஷின் விக்ரம் படத்தில் வேலை செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் எடிட்டராக பிலோமின் ராஜ் பணியாற்ற உள்ளார். அதோடு ரஜினியின் வேட்டையன் படத்திலும் இவர்தான் எடிட்டர்.

லோகேஷ் தலைவர் 171 படத்திற்காக ஐஎம்எக்ஸ் கேமரா கேட்டிருக்கிறார். அதற்கும் சன் பிக்சர்ஸ் முடியாது என்ற சொல்லி மறுத்துவிட்டனராம். படம் ஆரம்பிக்கும் முன்பே லோகேஷை தட்டி வைத்துள்ளனர் மாறன் குரூப்ஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்