40 கோடியில் உருவான சுல்தான்.. ரிலீசுக்கு முன்னாடியே இத்தனை கோடி லாபமா?

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் சுல்தான். முன்னதாக சூர்யா குடும்ப திரைப்படங்களை திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியது நினைவிருக்கலாம்.

ஆனால் தற்போது சூர்யா மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சுண்டைக்காய் ஹீரோ யார் படம் நடித்தாலும் வாங்கித் திரையிட ரெடியாக இருக்கின்றனர். அந்தவகையில் கார்த்தி படத்தை விட்டுவிடுவார்களா என்ன.

கார்த்தியின் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் கைதி திரைப்படம் வியாபாரத்தில் கார்த்தியை உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் அடுத்ததாக எதிர்பார்க்கும் திரைப்படம் தான் சுல்தான்.

சிவகார்த்திகேயனுக்கு ரெமோ என்ற படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 40 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இந்நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது.

sulthan-cinemapettai
sulthan-cinemapettai

சுல்தான் படம் வெளியாவதற்கு முன்னரே 27 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளதாக கூறுகின்றனர். சுல்தான் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல விலைக்குப் போயுள்ளதால் தான் இந்த லாபம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் வினியோகஸ்தரர்களை நம்பி ரிஸ்க் எடுக்காமல் தமிழ்நாட்டில் சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஆக மொத்தத்தில் ஆரம்பத்திலேயே லாபம் பார்த்த சுல்தான் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பதுதான் தற்போதைய ஒரே கேள்வி.