சுல்தான் படம் தியேட்டருக்கு வருவதற்கு விஜய்தான் காரணம்.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர் பிரபு

மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக சினிமா வட்டாரங்களும் தியேட்டர்காரர்களும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் என்றால் அது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் திரைப்படம் தான். கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ரெமோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இன்று சுல்தான் படத்தின் டிரைலர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா காலையிலேயே சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் ரஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் தமிழ் படம் சுல்தான் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

sulthan-trailer-launch
sulthan-trailer-launch

முதலில் சுல்தான் திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் தான் இருந்ததாம். படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்ற முடிவில் இருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றதால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கி தற்போது தியேட்டரில் வெளியிடப்போவதாக எஸ்ஆர் பிரபு ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார். மாஸ்டர் படம் போலவே சுல்தான் படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாஸ்டர் படம் தியேட்டர்களில்தான் வெளியாக வேண்டும் என்ற விஜய்யின் உறுதியான முடிவு தான் தங்களுக்கும் உந்து கோலாக அமைந்தது என பிரபு கூறியது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -