மணிரத்தினத்தை வைத்து காய் நகர்த்திய சுஹாசினி.. வைரமுத்துவின் கேரியர் சோலி முடிஞ்சிருச்சு

மணிரத்னம் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே காத்துக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் பெரும்பாலும் மணிரத்தினத்தின் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகள் இடம்பெறும். ஆனால் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதற்குக் காரணம் மணிரத்தினத்தின் மனைவி நடிகை சுஹாசினி தான் என்று கூறப்படுகிறது.

Also Read :23 வருட சாபத்தை தும்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.. சாதனை படைக்கும் மணிரத்தினம்

அதாவது சமீபகாலமாக வைரமுத்து மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி பாடகி சின்மயி நேரடியாகவே வைரமுத்துவை எதிர்த்தார். இது அப்போது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் சுஹாசினி மற்றும் சின்மயி இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகள்.

மேலும் வைரமுத்து தவறாக நடந்து கொண்டதாக சொன்ன சின்மயி தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தார். இதை தனது நெருங்கிய தோழி சுகாசினி இடம் கண்டிப்பாக சின்மயி காட்டியிருப்பார். இந்த கோபத்தினால் தான் மணிரத்தினத்திற்கு ஓவர் டார்ச்சர் கொடுத்து பொன்னியின் செல்வனில் இருந்து வைரமுத்துவை நீக்கிவிட்டார் சுகாசினி.

Also Read :சோழ வம்சத்தை கருவறுக்கும் வீரபாண்டியன் ஆபத்துதவிகள்.. பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ

அதுமட்டுமின்றி இந்தப் பிரச்சினையில் வைரமுத்து மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் வைரமுத்துவால் பொன்னியின் செல்வன் படத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதாலும் மணிரத்தினம் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை நீக்கியதால் அவரது படவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. மணிரத்தினமே வைரமுத்துவை மறுத்ததால் மற்ற இயக்குனர்களும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இப்போது வைரமுத்து உடைய சினிமா கேரியர் கேள்விக்குறியாகியுள்ளது.

Also Read :பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -