மணிரத்தினத்தை கோபமாக்கிய சுதா கொங்கரா.. அதிக பிரசங்கி தனத்தால் வாங்கிய திட்டு

ஏற்கனவே திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வந்த மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் உலக அளவில் ஃபேமஸாக மாறியிருக்கிறார். இவர் படம் எடுக்கும் விதமே மற்ற இயக்குனர்களை காட்டிலும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் கோபத்துடன் இருக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் இவர் தன் கோபத்தை கூட மரியாதையாக தான் காட்டுவார்.

அப்படிப்பட்ட இவரையே ஒருவர் டென்ஷன் ஆகி திட்ட வைத்திருக்கிறார் என்றால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. தற்போது இறுதிச்சுற்று, சூரரைப் போற்று திரைப்படங்கள் மூலம் பிரபல இயக்குனராக இருக்கும் சுதா கங்கரா மணிரத்தினரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

Also read : சூர்யாவை தாண்டிய சுதா கொங்கரா சம்பளம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்

அப்போது இவர் படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓவராக நடந்து கொள்வாராம். பொறுத்து பொறுத்து பார்த்த மணிரத்தினம் இவருடைய அதிக பிரசங்கித்தனத்தால் இவரை திட்டி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது மணிரத்தினத்தின் மனைவி சுகாசினியின் மூலம் வெளிவந்திருக்கிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில் சுதா கொங்கராவிடம் இது பற்றி கேட்டிருக்கிறார்.

அதாவது மணிரத்தினம் எப்போதுமே யாரையும் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அனைவரையும் மரியாதையுடன் தான் பேசுவார். ஆனால் அவர் உங்களை மட்டும் அந்த லேடி என்று குறிப்பிட்டு பேசுகிறார். எதனால் அவர் அப்படி உங்களை பேசினார் என்ற பல நாள் சந்தேகத்தை சுகாசினி, சுதாவிடம் கேட்டார்.

Also read : பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

அதற்கு பதில் அளித்த சுதா கொங்கரா நான் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வேன். அதற்காக நிறைய முறை நான் மணிரத்தினத்திடம் திட்டு வாங்கி இருக்கிறேன். அவர் எப்போதுமே தனக்கு பிடித்த மாணவர்களை திட்டுவது வழக்கம். அந்த வகையில் நான் அவருக்கு பிடித்தமான மாணவி என்று கலகலப்பாக பதில் அளித்திருக்கிறார்.

அவர் கூறிய இந்த பதில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது பல தேசிய விருதுகளை வாங்கி குவித்த சூரரைப் போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அந்த படத்தையும் சூர்யா தான் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read : டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை கையிலெடுக்கும் சுதா கொங்கரா.. பக்காவாக காய் நகர்த்தும் தயாரிப்பு நிறுவனம்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -