வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சூர்யாவுடன் மிரட்டல் கூட்டணியை உருவாக்கிய சுதா கொங்கரா.. ரத்னவேலு மனைவியை தூக்கிய பட குழு

Surya 43- Puranaanooru: நடிகர் சூர்யாவுக்கு சில வருடங்கள் சினிமா மார்க்கெட் டல்லாகியிருந்த நேரத்தில் மிகப்பெரிய கம்பேக்காக அமைந்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்திற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் கூட்டணி எப்போது அமையும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்று கதை மையமாகக் கொண்ட இந்த படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. பான் இந்தியா மூவியாக இது பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாக வேலைகளில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் அவ்வளவு சீக்கிரம் தொடங்க வாய்ப்பில்லை. இதற்கிடையில் சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இயக்குனர் சுதா கொங்கரா இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.நேற்றைய தினம் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவருடைய 43 வது படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புறநானூறு என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவை சூர்யா 4:00 மணிக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவின் பேக்ரவுண்டில் ஏதோ பெரிய போராட்ட களம் போல் இருக்கிறது. சூர்யாவின் பெயர் வரும்பொழுது அவருடைய கண்கள் மட்டும் காட்டப்படுகிறது. துல்கர் சல்மான் பெயர் வரும் பொழுது துப்பாக்கி காட்டப்படுகிறது. இந்தி நடிகர் விஜய் வர்மாவின் பெயர் வரும்பொழுது போராட்டக்காரர்களின் புகைப்படம் கட்டப்படுகிறது.

நடிகை நஸ்ரியா பெயர் வரும் பொழுது மைக் புகைப்படம் காட்டப்படுகிறது. இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு நஸ்ரியா தமிழில் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த படம் ஏதோ ஒரு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதை போல் அமைந்திருக்கிறது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படம் சூர்யாவின் முந்தைய படங்களான ஆய்த எழுத்து, ஜெய் பீம் போன்ற கதை அம்சத்தை கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

Trending News