சிம்புவின் ஒஸ்தி பட நடிகையா இது.‌? வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கலக்கலான புகைப்படம், குவியும் லைக்ஸ்

oosthe-heroin-simbu
oosthe-heroin-simbu

டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

அதன்பின் இந்தியா வந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ராணாவின் லீடர், பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்தார். தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா .

இதையடுத்து இவர் திரையுலகை விட்டு நீங்கி தன்னுடன் அமெரிக்காவில் எம்பிஏ படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லா என்பவரை இரண்டு வருடங்களாக காதலித்து அதன்பின் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரிச்சா தனது கணவனுடன் இருக்கும் புகைப்படத்துடன்,

osthe-actress-cinemapettai

‘எங்களுடைய குழந்தை ஜூன் மாதம் இவ்வுலகில் காண வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

எனவே இவருடைய இந்த ட்விட்ர் பதிவால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner