அடுத்த அரசியல் கட்சிக்கு தயாராகும் ஹீரோ.. விஜய்யை பின் தொடரும் வாரிசு நடிகர்

Actor Vijay : இப்போது விஜய் அரசியலில் போட்டியிடுவது 100% உறுதி ஆகிவிட்டது. ஆனால் இதற்கு முன்னதாக பொதுமக்கள், மாணவ, மாணவியர் என பலருக்கும் விஜய் பல உதவிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக தொகுதி வாரியாக முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவியருக்கு பரிசுகளை வழங்கி இருந்தார்.

அதன் பிறகு தனது ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகள் தொடர்ந்து செய்து வந்தார். இதெல்லாம் விஜய் அரசியலில் வருவதற்காக தான் செய்கிறார் என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தது. அதை போல் நேற்றைய தினம் தமிழகவெற்றிகழகம் என்று தனது கட்சி பெயருடன் விஜய் அரசியலுக்கு வருவதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்போது அதேபோல் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி பல உதவிகள் செய்து வருகிறார். அதாவது பல வருடங்களாகவே சூர்யா அகரம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து விவசாயிகளுக்கும் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் உதவி வந்தனர்.

Also Read : விஜய்யின் அரசியல் என்ட்ரி.. சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ள 5 விஷயங்கள்

இந்த சூழலில் கார்த்தி தற்போது தனது 25 வது பட விழாவில் 25 மதிப்புக்குரிய சமூக ஆர்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கி உள்ளார். ஏற்கனவே கார்த்தி சமூகத்திற்காக உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதில் முதல் கட்டமாக இப்போது 25 லட்சம் வழங்கியிருக்கிறார்.

ஒரு நல்ல நோக்கத்துடன் கார்த்தி இவ்வாறு செய்திருந்தாலும், அடுத்து அரசியலில் இறங்குவதற்காக தான் இது போன்ற காரியங்கள் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எதுவாக இருந்தாலும்
மக்களுக்கு கார்த்தி தொடர்ந்து உதவி செய்வது அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

karthi
karthi

Also Read : கமல் போல் வாக்குறுதி கொடுக்கும் விஜய்.. ரெண்டு வருஷத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகும் தளபதி