அண்ணன், தங்கச்சி பாசத்தை வைத்து ஹிட்டடித்த 7 படங்கள்.. சிவாஜிக்கு நிகராக பாராட்டு பெற்ற ராதிகா

தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் பாடங்கள் ஏராளமாக வெளியாகிறது. ஆனாலும் இந்த அண்ணன், தங்கச்சிக்கு இணையான சென்டிமென்ட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையும் அண்ணன், தங்கச்சியை மையமாக வைத்த படங்கள் வெளியாகி தான் வருகிறது.

பாசமலர் : இன்றளவும் அண்ணன், தங்கை உறவுக்கு எடுத்துக்காட்டாக சொல்லும் படம் பாசமலர். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சகோதரி இருவரும் அண்ணன், தங்கையாக நடித்து இருந்தனர். இப்படத்தை டிஎம் சௌந்தர்ராஜனின் மலர்ந்து மலராத பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

முள்ளும் மலரும் : மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபா, சந்திரபாபு, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினி மற்றும் சோபா இருவரும் அண்ணன், தங்கையாக நடித்து இருந்தனர். இப்படத்தில் தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணனாக காளி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.

கிழக்குச் சீமையிலே : விஜயகுமார் மாயாண்டி தேவனாகவும், அவரது தங்கையாக ராதிகா விருமாயிகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் கிழக்குச் சீமையிலே. கோவக்கார மாப்பிள்ளைக்கு தனது தங்கையை கொடுத்துவிட்ட கஷ்டப்படும் அண்ணனின் படமாக இப்படம் இருந்தது. இப்படத்தில் ராதிகாவின் நடிப்பு அபாரம். இந்த படத்தை பார்த்து சிவாஜி ராதிகாவை நேரில் கூப்பிட்டு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டவர் பூமி : சேரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பண்டவர் பூமி. கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் படமாக இருந்தது. இப்படத்தில் ராஜ்கிரன், சந்திரசேகர் ஆகியோர்க்கு தங்கையாகவும், நடிகர் ரஞ்சித்துக்கு அக்காவும் கவிதா நடித்திருந்தார். ஜெயிலில் இருக்கும் தனது தம்பிக்காக தனது மகளைத் திருமணம் செய்து வைக்கக் காத்திருக்கும் அக்கா. ஆனால் தன் தங்கை போலவே முக ஜாடையில் இருக்கும் ஜீவாவை ஏற்க மறுக்கிறார் ரஞ்சித்.

சமுத்திரம் : இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ் ஆகியோருக்கு தங்கையாக காவிரி நடித்திருந்தார். தங்கைக்காக முழு சொத்தையும் இழக்கும் அண்ணன்கள், அண்ணனுக்காக வாழ்க்கையை தூக்கி எறிந்த தங்கை என சென்டிமென்ட் கலந்த படமாக இருந்தது சமுத்திரம். இப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

சொக்கத்தங்கம் : பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, உமா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சொக்கத்தங்கம். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் உமா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து இருந்தனர். இப்படத்தில் தங்கைக்காக விருப்பமில்லாத பெண்ணையும் திருமணம்செய்து கொள்ள தயார் ஆகிறார் விஜயகாந்த்.

திருப்பாச்சி : பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா, மல்லிகா ,மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. தனது தங்கையை நகரத்தில் தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் விஜய். ஆனால் அங்கு இருக்கும் பிரச்சனைகளை கண்டு அந்த ரவுடிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்கிறார்.