மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் தற்போது தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகன்.

இவர் மலையாளத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானாலும், தமிழ் சினிமாவிற்கு மாஸ் ஹீரோக்களுடன் உடன் என்ட்ரி கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடம் எளிதில் பிரபலமாகிகினார்.

இருப்பினும் மாஸ்டர் படத்தில் இவருடைய கதாபாத்திரம் தூக்கலாக இல்லை என்பதே ரசிகர்களின் விமர்சனம் ஆகும். இந்த நிலையில் மலையாளத்தில் பகத் பாசிலுடன், மாளவிகா மோகன் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றிய அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏனென்றால் மாளவிகா மகனுக்கு 2015ஆம் ஆண்டு பஹத் பாசிலுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து. அப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் முடிவடைந்து, கிட்டதட்ட 30 சதவீத படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில்,

malavika-mohan-cinemapettai

எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகன் பழங்குடிப் பெண்ணாக நடிப்பதால், அவரைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக காணப்பட்டது.

இந்த சூழலில் படம் திடீரென்று ட்ராப் செய்யப்பட்டது ரசிகர்களின் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்