சுப்பிரமணியபுரம் படத்தில் பிரபல நடிகரை தூக்கிய சசிகுமார்..  நடிப்பதற்கு முன்பே இப்படி பண்ணினா எப்படி தம்பி

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் ஆனால் ஒரு சிலர் கதையில் ஸ்கோப் இல்லை என தவிர்த்து விடுவார்கள். மற்றும் ஒரு சிலர் இயக்குனருக்கு அறிவுரை கூறி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை  கெடுத்து கொள்வார்கள்.

அந்த வரிசையில் தற்போது சாந்தனு இடம்பிடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறாமல் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.

 ஆனால் ஆரம்ப காலத்தில் சாந்தனுவுக்கு வெற்றிப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.

 சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார்  கதாபாத்திரத்திற்கு பாக்யராஜ் மகன் சாந்தனு ஒப்பந்தமாகியுள்ளார்,  அதேபோல் ஜெயின் கதாபாத்திரத்திற்கு  பாண்டியராஜன் மகனான பிரதீப் நடிக்க இருந்தார்.

 இவர்கள் இருவரும் சசிகுமாரிடம் இப்படத்தில் இடம்பெற்ற குடும்பப்பாங்கான காட்சிகளில் சிலவற்றை மாற்றுமாறு கூறியுள்ளனர். இது  சசிகுமாருக்கு பிடிக்காததால் இவர்கள் இருவரையும் புறந்தள்ளிவிட்டு.

 பின்பு சசிகுமார் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து  இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி சசிகுமாருக்கு பெரிய அளவு பெயரை வாங்கிக் கொடுத்தது

- Advertisement -