சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்க்காக எழுதப்பட்ட கதை.. கௌதம் மேனனிடம் உஷாரான தளபதி

தொடக்கத்தில் தனது தந்தை ஏ எஸ் சந்திரசேகர் இயக்கிய படங்களில் நடித்துவந்த தளபதி விஜய், அதன் பிறகு ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பல போராட்டத்திற்கு பிறகே தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனால் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதுமே உஷாராக இருக்கும் விஜய், காதலை வேறு ஒரு கோணத்தில் காண்பித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கதையை நிராகரித்து இருக்கும் விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது 2 வருடங்களாக திரைக்கு இப்போது வரும், அப்போது வரும் என ரசிகர்களை காக்க வைத்துக் கொண்டிருக்கும் ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற படத்தின் கதையை தான் தளபதி விஜய் நிகராகரித்திருக்கிறார். அதன்பிறகு இந்தப் படத்தின் கதையை மாற்றி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படத்தை வேர்ல்ஸ் நிறுவனம் தயாரித்தது. அதிரடி த்ரில்லர் படமான இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராகே கதாநாயகியாக நடித்திருக்கிறார். ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்தப் படத்தை இன்னமும் ரிலீஸ் செய்ய இழுத்தடித்துக் கொண்டிருப்பதால் நல்லவேளை தளபதி இந்த படத்தில் நடிக்காமல் சுதாரித்துக் கொண்டார் என அவருடைய சாமர்த்தியத்தை புகழ்கின்றனர்.

மறுபுறம் வேர்ல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளரான ஐசரி கணேசன் அவருடைய மருமகன் வருண் நடித்தும், இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் அலட்சியம் காட்டி கொண்டிருக்கின்றனர். நடிகர் வருண் இந்தப் படத்திற்காகவே தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அதன்பிறகு ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ படத்தை சூப்பர் ஹிட் அடித்து விடலாம் என்ற கனவில் அங்கு சென்றார். ஆனால் அடுத்த பிக் பாஸ் சீசனே துவங்க இருக்கும் நிலையில் இன்னும் படம் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

Trending News