டைரக்டர் ஆயிட்டா ஏன் யூடியூப் வரீங்க.? சர்ச்சைக்கு பெயர் போன ப்ளூ சட்டை அண்ணாவுக்கு வைத்த செக்

தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த ஒரு படத்தையும் புகழ்ந்து பேசியதே கிடையாது.

ஒரு படத்தை பற்றி பேச ஆரம்பித்தால் அதில் ஏகப்பட்ட குறைகளை சொல்வதோடு கிண்டலும், கேலியும் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.. ஒரு கட்டத்தில் இவரின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நடிகர்களின் ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் கண்டபடி திட்டி தீர்த்தனர்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இயக்குனர்களை வெறுப்பேற்றி பார்ப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் ஒரு படத்தை எடுத்துப் பார்த்தால் தான் அதன் அருமை தெரியும் என்று கூறினார்கள்.

இதனால் ப்ளூ சட்டை மாறன் ஆன்ட்டி இந்தியன் என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி பரவலாக விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனுக்கு தற்போது இயக்குனர்கள் சங்கம் ஒரு தடை விதித்துள்ளனர்.

அதாவது இனி யூடியூபில் படங்களைப் பற்றி விமர்சனம் செய்தால், படத்தை இயக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். அப்படி படம் இயக்குவதாக இருந்தால், மற்ற படங்களைப் பற்றி தரக்குறைவாக கண்டமேனிக்கு விமர்சனம் செய்யக்கூடாது என்று அவருக்கு செக் வைத்துள்ளனர்.

ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தின் மூலம் ப்ளூ சட்டை மாறன் பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தார். அதையெல்லாம் கடந்து ஒருவழியாக படத்தை ரிலீஸ் செய்தாலும், படம் அப்படி ஒன்றும் வரவேற்பை பெறவில்லை. மேலும் இயக்குனர் சங்கம் இப்படி ஒரு தடையும் போட்டிருப்பதால், அவர் படம் இயக்குவதற்கு பதில் யூடியூபில் விமர்சனமே செய்துவிடலாம் என்று சரண்டர் ஆனாலும் ஆச்சரியம் இல்லை.