த்ரிஷ்யம் 2 படத்தை பார்த்துவிட்டு ராஜமவுலி தட்டிய ஸ்டேட்டஸ்.. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறாராம்!

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படத்தை பார்த்துவிட்டு தட்டிய ஸ்டேட்டஸ் தான் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.

பாகுபலி படங்களின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமவுலி. அதனைத் தொடர்ந்து தற்போது ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் டீஸர்கள் வெளியாகி வைரல் ஆனது.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான திரிஷ்யம் 2 படத்தை ராஜமவுலி தற்போது தான் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் திரிஷ்யம் 2 படத்தை இன்ச் பை இன்ச்சாக அவர் விவரித்துள்ளது மலையாள ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ராஜமவுலி தன்னுடைய வாட்ஸ்அப் மூலம், திரிஷ்யம் 2 படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தது. ஆனால் உண்மையில் படத்தின் எழுத்து தனித்துவம் வாய்ந்து மிகச் சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாகமே ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மிக்க வைக்கிறது எனவும், இது ஒரு ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற பல படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் எனவும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார் ராஜமௌலி.

திரிஷ்யம் 2 படம் வெளியானபோது அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3 படத்திற்கான கதையை கூறி விட்டதாகவும், திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

ss-rajamouli-comment-about-drishyam2
ss-rajamouli-comment-about-drishyam2
- Advertisement -