நான் கமலை பிரிவதற்கு இதுதான் காரணம்.. மறைவுக்கு முன் மனம் திறந்து பேசிய ஸ்ரீவித்யா

Kamal – Srividhya: சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவை நேரில் சென்று பார்த்தது தென்னிந்திய மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு நடிகனாக, தன்னுடன் நடித்த சக நடிகை நோய் வாய் பட்டு இருக்கும் பொழுது நேரில் சந்தித்ததில் என்ன இருக்கிறது என தோணலாம். இந்த இருவருக்கும் பின்னால் மிகப்பெரிய லைலா மஜ்னு காதல் கதையே இருக்கிறது.

கமல் மற்றும் ஸ்ரீவித்யா அப்போதைய காலகட்டத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமாக சொல்ல வேண்டிய படம் அபூர்வராகங்கள். திரையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது போல் இருவருக்கும் நிஜ வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இத்தனைக்கும் ஸ்ரீவித்யா கமலஹாசனை விட இரண்டு வயது மூத்தவர் என சொல்லப்படுகிறது.

கமலஹாசன் காதல் கலையில் வல்லவர், நிறைய நடிகைகளை காதலித்து கழட்டி விட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்திகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட கமலஹாசனின் முதல் காதல் என்பது திருமணத்தை நோக்கியதாகத்தான் இருந்திருக்கிறது. ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என கமல் ரொம்பவும் உறுதியாக இருந்திருக்கிறார்.

Also Read:கேப்டன் இறப்பில் ரஜினி, கமலுக்கு இருந்த பொறுப்பு.. நன்றி மறந்த நடிகர் சங்கம்

கமல் அப்போதுதான் சினிமாவில் தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் உருகி உருகி காதலிப்பது, மீடியாக்கள் இவர்களைப் பற்றி எழுதுவது ஸ்ரீவித்யாவின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் நேரடியாக கமலை அழைத்து என் பெண் பெரிய நடிகையாக வர வேண்டியவள், அதேபோன்றுதான் நீயும் இதனால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

கமல் ஸ்ரீவித்யா பிரிவுக்கு காரணம்

இதனால் கமலஹாசன் ரொம்பவே மனம் நொந்து போய் இருக்கிறார். ஸ்ரீவித்யாவிடம் நீ வீட்டை எதிர்த்து விட்டு வந்துவிடு, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் ஸ்ரீவித்யா என் அம்மாவின் விருப்பத்தை தாண்டி நான் எதையுமே செய்ய மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். அந்த கோபத்தில் தான் கமல் ஸ்ரீவித்யாவை பிரிந்ததும், வாணி கணபதியை மணந்ததும்.

பின்னர் ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து அவருடைய கல்யாண வாழ்க்கையே சூனியம் ஆனது. பின்னாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவித்யா, கமலஹாசனை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். தன்னுடைய முதல் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீவித்யா மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது கமல் நேரில் சென்று பார்த்திருக்கிறார்.

Also Read:சிவாஜி, மற்ற நடிகர்களுக்காக ஓடி ஓடி உழைத்த கேப்டன்.. மட்டமாக நடந்து கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம்