ராகுல் டிராவிட்டுக்கு நன்றி தெரிவித்த இலங்கை கேப்டன்.. என்ன காரணம் தெரியுமா.?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியை வென்று இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது.

இலங்கை அணி கடந்த சில வருடங்களாக அனைத்து விதமான தொடர்களிலும் பல சிக்கல்களை சந்தித்து வந்தது. அதற்கு காரணம் அணியில் உள்ள சீனியர் வீரர்களின் சம்பள பிரச்சினை. இந்நிலையில் இலங்கை அணி சீனியர் வீரர்களை ஒதுக்கிவைத்துவிட்டு இளம் படையை களமிறக்கியது.

டாசுன் சனாகா தலைமையில் இந்திய தொடரை விளையாடத் தொடங்கிய இலங்கை அணி ஒருநாள் தொடரில் தோல்வியடைந்து, டி-20 தொடரை கைப்பற்றியது. இந்த டி20 தொடரை வெல்வதற்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

Shanaka-Cinemapettai.jpg
Shanaka-Cinemapettai.jpg

தொடரை வென்ற பின்னர் இலங்கை அணியின் கேப்டன் டாசுன் சனாகா இந்த இக்கட்டான கொரோன காலகட்டத்திலும் போட்டியை கைவிடாது முடித்துக் கொடுத்த பிசிசிஐக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும், கேப்டன் ஷிகர் தவான்ற்கும் இருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு இந்த வெற்றி நெகிழ்ச்சியை தருவதாகவும், இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -