ராஜமாதாவாக நடிக்க ராஜமௌலிக்கு 1008 கண்டிஷன் போட்ட பிரபல நடிகை.. கடைசில ஆளயே மாத்திட்டாரு

இந்திய அளவில் மெகா ஹிட்  அடித்த படம் தான் பாகுபலி. இந்தப் படத்திற்கு பிறகு, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் நடிகையும் வேறொரு தளத்திற்கு சென்று விட்டனர். அந்த அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது பாகுபலி.

அதேபோல் இந்தப்படத்தின் இயக்குனரான எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி படத்திற்கு முன், பாகுபலி படத்திற்குப் பின் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு புகழை பெற்றார். ஏனென்றால் இந்தப் படத்திற்கு முன் தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய ராஜமௌலி, இந்தப் படத்திற்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்டார்.

மேலும் பாகுபலி படத்தில் முதலில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது ஸ்ரீதேவி தானாம். இதனைக் குறித்து ராஜமௌலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த தகவல்களால் ஸ்ரீதேவி கடுமையாகக் கோபப்பட்டாராம்.

Ramya_Krishnan_Bahubali

அதாவது ஒரு பேட்டியில் ராஜமௌலி ஸ்ரீதேவிக்கு அதிக கோரிக்கைகள் இருந்ததாகவும், சம்பளம் அதிகம் கேட்டதாகவும், இதனால் ஸ்ரீதேவியை பாகுபலி படத்தில்  நடிக்க வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீதேவி, ராஜமௌலி இப்படி பேசுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும், தான் பல கோரிக்கைகள் வைக்கும் ஆள் இல்லை என்றும், பாகுபலி முடிந்து போன கதை அதைப் பற்றி இப்பொழுது பேசி எந்த பயனும் இல்லை என்றும், தான் நடிக்காமல் இருந்த பல ரோல்களில் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.

RajaMouli-Sridevi
RajaMouli-Sridevi

இதனைத்தொடர்ந்து பாகுபலி இயக்குநர் ராஜமௌலியிடம் இதனைக் குறித்து கேட்டபோது, ‘யார் உண்மையை சொல்கிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுபற்றி நான் பொது இடத்தில் விவாதிப்பது தவறானது. அதற்காக நான் வருந்துகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்